கோவையில் அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி

Spread the love

கோவையில் அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்புத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

கோவை கே.கே. புதூர் பகுதியில், அஞ்சல் துறையின் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.

கே.கே. புதூர் துணை அஞ்சலகம் முன்பு தொடங்கிய இந்தப் பேரணிக்யை கவுன்சிலர் காயத்ரி முன்னிலை வகித்து துவக்கி வைத்தார். அஞ்சல் உதவிக் கண்காணிப்பாளர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார்.

இதில் கே.கே. புதூர் துணை அஞ்சலக அதிகாரி நிர்மலா, ஸ்ரீ அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் துணை அஞ்சலக அதிகாரி மாலா மற்றும் கே.கே. புதூர், வேலாண்டிபாளையம், ஸ்ரீ அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் பகுதிகளைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியானது பி.வி. கிருஷ்ணன் வீதி, மருதகுட்டி வீதி, சின்னம்மாள் வீதி, ஜி.கே. சுந்தரம் வீதி மற்றும் மணியம் மருதகுட்டி வீதி வழியாகச் சென்று மணியம் வேலப்பர் வீதியில் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியின் மூலம் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் சேமிப்புக் கணக்குகளின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.