குரங்குகளுக்கும் ஓணம் விருந்து!

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாம் கோட்டாவில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் நடைபெறும் ‘வானர சத்யா’ எனும் சிறப்பு விருந்து நேற்று நடைபெற்றது. இதில் வாழை இலைகளில் சோறு, பருப்பு குழம்பு, அப்பளம், பச்சடி, அவியல், ஊறுகாய் உள்ளிட்ட பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்ட நிலையில், குரங்குகள் வரிசையாக வந்து விருந்துண்ட காட்சி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.