, , ,

காம்தார் நக​ரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் கோரிக்கை

sp balasubramaniam
Spread the love

மறைந்த பாடகர் ​எஸ் பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நக​ரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த​ 1966 ஆம் ஆண்டு எஸ்.பி.கோதண்டபாணி இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான எஸ்பி பாலசுப்ரமணியம் தனது வாழ்நாளில் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 16 மொழிகளில் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.​எஸ் பி பாலசுப்ரமணியம்  6 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, 2001 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது, 2021 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.​ ​அவர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2020ம் உயிரிழந்தார்.பாலசுப்ரமணியம் மறைந்தாலும் அவரது பாடல்கள் மக்களிடையே ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

​

இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.