,

ஒரு அடி அளவுகோலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கலைஞர்

umt raja
Spread the love

ஜனநாயகத்தின் அளவுகோல் ஓட்டு என்ற கருத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு அடி அளவுகோலில் ஓட்டு முத்திரை, தேர்தல் தேதி ஏப்ரல் 19, இந்திய வரைபடம், 100 சதவீதம், 2024, என்று ஒட்டுமொத்தமாக செதுக்கி வடிவமைத்துள்ளார் கோவை கலைஞர் யு.எம்.டி ராஜா. இதனை வடிவமைக்க சுமார் 7 மணி நேரம் எடுத்ததாகவும் மக்கள் அனைவரும் ஏப்ரல் 19 ஆம் தேதி கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதனை வடிவமைத்துள்ளதாகவும் யு.எம்.டி ராஜா தெரிவித்துள்ளார்.