,

அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றியுள்ளார் முதல்வர் – வானதி சீனிவாசன் காட்டம்

வானதி சீனிவாசன்
Spread the love

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஒரு அரசாங்க நிகழ்ச்சிக்கு மரியாதை கொடுத்து பொதுமக்களின் நிகழ்ச்சி என்று நாங்கள் செல்லும் பொழுது அவர் இன்று பொள்ளாச்சியில் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி இருக்கிறார்.அரசாங்கத்தின் விழாவில் பாரத பிரதமரை பற்றி குறை கூறியது பாரதிய ஜனதா கட்சி பற்றி குறை கூறியது இவை எல்லாம் அரசியல் நாகரிகத்திற்கு அப்பாற்பட்டதாக நாங்கள் பார்க்கின்றோம். அவர் அதற்கு முன்பாக பேசுகின்ற போது தமிழகத்திற்கு மத்திய மோடி அரசு என்ன செய்தது என்று கேட்டிருக்கிறார்.பிரதமர் மோடி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் அரசு நிகழ்ச்சிகளை இங்கே வந்து துவக்கி வைக்கின்ற போது பக்கத்திலேயே அமர்ந்து கேட்டிருக்கிறார் .அது அவருக்கு தெரியவில்லையா.எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்காக கொடுத்திருக்கிறார் அப்பொழுது எல்லாம் உங்களுடைய காதுகளை வசதியாக மூடி வைத்து விட்டீர்களா.தென்னை விவசாயிகளுக்கு என அறிவிப்பு என்று பார்த்தால் தேங்காய் எண்ணெய்களை ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
அதைப்பற்றி எந்த அறிவிப்பும் கிடையாது .
ஆனால் இலை வாடல் நோய் இருக்கின்ற தென்னை மரத்தை வெட்டி எடுப்பதற்கு 10 கோடி ரூபாய் நிதி கொடுப்பேன் என்று கூறுகிறார்.தென்னை விவசாயத்தை காப்பாற்றுவதற்கு உதவி செய்யுங்கள் என்று நாங்கள் கேட்கின்றோம் ஆனால் மரத்தை வெட்டி போடுவதற்கு பணம் கொடுக்கிறார்கள். விவசாயம் வாழ்வை பற்றி உங்களுடைய அக்கறை இதுதான் முதல்வரே.
பாஜகவினர் whatsapp யுனிவர்சிட்டி வைத்து பொய் பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள் இவை அனைத்தும் திமுகவிற்கு சொந்தமானது. திமுக ஒவ்வொரு முறையும் பொய் பேசி தான் கிட்டத்தட்ட 1967 முதல் பொய் பேசி தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் ஆரம்பத்தில் அரிசி எவ்வளவு கொடுப்பேன் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு கூறினீர்கள் இன்றைக்கு மூன்று படி அதன் பிறகு ஒரு படி என்று பொய் பேசி ஆட்சியைப் பிடித்தது. நீங்கள் தான் இந்த whatsapp யுனிவர்சிட்டி பொய் பேசுவது இது எல்லாம் திமுகவிற்கு கைவந்த கலை.முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிராக என்று கூறினீர்கள் இன்றைக்கி வரைக்கும் அது பொய் தான் அதை நீங்கள் மாற்றவே இல்லை மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மாநில அரசு எங்கே தடுத்தது என்று கூறினீர்களே சென்னை சேலம் எட்டு வழி சாலை மத்திய அரசு கொடுக்கின்ற போது தடுத்தது யார் இப்படி பல்வேறு விஷயங்களை சொல்லலாம். இந்த மாதிரி ஒவ்வொரு முறை மத்திய அரசு திட்டம் வருகின்றபோதும் அதற்கு ஏதாவது ஒரு விதத்தில் தடுத்து நிறுத்தி மத்திய அரசின் திட்டங்களையும் மத்திய அரசுக்கு எதிராக கெட்ட பெயரையும் உருவாக்க முயற்சி செய்தீர்கள்.அந்த நோக்கம் 2019-ல் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் 2024 தமிழக மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள் எப்படி எல்லாம் போய் பேசுகிறீர்கள் என்று ஒவ்வொரு நாளும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் 19 இல் போட்ட கணக்கு வெற்றியை கொடுத்திருக்கலாம் 24 கணக்கு வெற்றி என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான்.பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும்போதும் கிளி பிடித்தது போல் இருப்பது திமுகவிற்கு தான் அதனால் இந்த whatsapp யுனிவர்சிட்டி பொய் பேசுகிறார்கள். மத்திய அரசு எதுமே செய்யவில்லை.திமுகவின் பொய்களும் பொய் வாக்குரிதிகளும் ஒவ்வொரு நாளும் மக்களிடத்தில் அம்பலப்பட்டு கொண்டிருக்கின்றது. இலவச பேருந்து பயணம் என்றீர்கள் ஆனால் பேருந்து இல்லை. பொம்பளைகளை பார்த்தால் பேருந்து நிற்காது. ஏனென்றால் இலவசமாக கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான்.பொய் பேசுவது என்பது திமுகவின் கலை. இதை வைத்துக்கொண்டு அரசு மேடையை இனிமேல் அரசியல் மேடையாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்.