Tag: #lmurugan
-
தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க…
-
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணி அளவில் ஈஷாவில் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா தியானலிங்கத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஜக்கி வாசுதேவ் அமைச்சர் அமித்ஷாவை காரில் அவரே ஓட்டி வந்தார். மேடையில்…
-
கோவை விமான நிலையத்தில்செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்கள், 18-வது நாடாளுமன்ற முதல் கூட்டம் 24-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. மூன்றாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையுடன் முடிந்தது. இந்த தேசம் 2047ம் ஆண்டு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக நெடுந்தொலைவு பார்வையோடு இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்த பாராளுமன்ற கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு…
-
நீலகிரியில் ஸ்டார்ங் ரூம் கேமராக்கள் 20 நிமிடம் நின்றது தொடர்பாக கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை பிரச்சனை வரும் என்பது குறித்து தெரியும், சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் இங்கொன்றும் இல்லை எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வரும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் மேட்டுப்பாளையம் சென்றார். இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில்…
-
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக…
-
கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடி சுமார் 6 மணி அளவில் பேரணி துவங்கும் இடமான சாய்பாபா கோவில் சந்திப்பிற்கு வந்தடைந்தார். பின்னர் பாஜகவினரின் வரவேற்போடு பேரணி தொடங்கியது. இந்த பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மூன்று…
-
கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவுடன் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நாளை சேலத்தில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது பாஜகவினருக்கு…
-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர்(பரப்புரை) பதவி வகித்து வந்த அனுஷா ரவி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு அவர் அளித்துள்ள் ராஜினாமா கடிதத்தில், “தேர்தல் அரசியலில் (Electoral Politics) மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.” குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சென்னையில் பாஜக…
-
தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக 2024 தேர்தல் அமையும் – பிரதமர் மோடி பேட்டி
தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக வருகிற மக்களவை தேர்தல் அமையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கினார். மத்திய…
-
மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த எல்.முருகன் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, எல்.முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளதாகவும் பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில் அவர் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். இவருக்கு வழங்கிய பதவி தமிழகத்தில் மேலும் பாஜகவை பலப்படுத்தும்…