Tag: #dmk
-
நீட் தேர்வைக் கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து இன்று திமுக மாணவரணி சார்பில்…
-
கடந்த மாதம் 29 ஆம் தேதி திமுக சட்டத்துறைச் செயலாளர், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி தலைமையில், சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை முன்னிலையில் திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீதி பரிபாலனத்திற்கும், மாநில சுயாட்சிக்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவும் இருக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இதனையொட்டி வரும்…
-
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கோவை வரதராஜபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள சாய் விவாகா மகால் திருமண மண்டபத்தில், தளபதி இரத்ததான இயக்கத்தின் சார்பில், கோவை அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கும் முகாமை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கி ரத்த தானம் வழங்கியவர்களுக்கு,சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில், 500 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள். திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மணியரசன்…
-
தமிழக அரசியலில் அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்த அதிமுக, தற்போது ஆளும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் அல்லாத மாற்று அணிகளாக அதாவது, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீத உயர்வை, மற்ற அரசியல் கட்சியினர், அரசியல் நோக்கர்கள், நடுநிலையாளர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற கால கட்டத்திற்குப்பின் அதாவது ,1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் இந்திய தேசிய…
-
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றிக்கு வித்திட்ட திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழாவாக கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் , “கடந்த முறை கோவைக்கு வந்து பங்கேற்ற கூட்டம் இந்தியா முழுவதும் ட்ரெண்டானது. கூட்டத்திற்கு வந்த ராகுல் ஓர்…
-
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அமைச்சர்கள் இணைந்து வெள்ளியில் செங்கோல் வழங்கினர்.
-
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றிக்கு வித்திட்ட திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழாவாக கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக…
-
கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற, இருகூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஜெயக்குமார் மகள் ஜெ.அனிதா ஷாலினி – எஸ்.சுதர்சன் பாரதி ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
-
கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னி ரெசிடன்சியில் நடைபெற்ற அனிருத் துரைசாமி-சுப்ரஜா பாலசுந்தரம் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
-
கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலையின் தோல்வியினை பொது மக்கள், நடுநிலையாளர்கள், பாஜகவினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் எதிர் பார்க்காத ஒன்று என்பதால், அவர் சட்டமன்ற, வார்டு, பூத் வாரியாக பெற்ற ஓட்டுக்கள் குறித்து அலசி ஆராய்ந்து வருகின்றனர். அறிவியல் கண்ணோட்டத்துடன், ஆக்கபூர்வமான, ஆழமான அனைத்து கருத்துக்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் அண்ணாமலையின் சேவையினை கோவை மக்கள் பயன் படுத்த தவறி விட்டனர் என்ற கருத்தும் நிலவி வருகிறது. தேர்தல் முடிவுகளில் இந்தியாவே எதிர்பார்க்கப்பட்டதொகுதிகளில் ஒன்று கோவை.…