தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள நிலுவைப் பயிர்க்கடன்களை வசூலிக்கும் நடவடிக்கை முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த உத்தரவு அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், சில இடங்களில் தொலைபேசி வாயிலாகக் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக விவசாயிகள் தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்த எச்சரிக்கை விடுத்துள்ள அரசு, பயிர்க்கடன் வசூல் தொடர்பாகக் கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து யாரேனும் போன் செய்து தொந்தரவு செய்தால், அந்த எண் மற்றும் கூட்டுறவுச் சங்க விவரங்களை 98840 00845 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.



Leave a Reply