தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் குறித்த முக்கிய உத்தரவைத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
-
5 ஆண்டு கெடு: அரசு ஊழியர்களின் பணிக்கால விதிகளின்படி (Section 31(4)), பணியில் சேர்ந்த நாளிலிருந்து அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் துறைத் தேர்வுகளில் (Departmental Exams) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
-
பதவி ரத்து / பணி நீக்கம்: இந்த 5 ஆண்டு கால அவகாசத்திற்குள் தேர்ச்சி பெறத் தவறும் பட்சத்தில், அவர்களின் நிருபண காலம் (Probation) நீட்டிக்கப்பட மாட்டாது எனவும், உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிகாரிகளுக்கு உத்தரவு: இந்த விதியைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEO) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத ஊழியர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது!



Leave a Reply