கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, புதிய மாதமான செப்டம்பர் தொடக்கத்தில் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று (செப்டம்பர் 1) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,385-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 அதிகரித்து, ரூ.1,15,080 என்ற புதிய விலையை எட்டியுள்ளது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே வேளையில், வெள்ளி விலையில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேசப் பொருளாதாரச் சூழல், பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையிலேயே ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்திருப்பதே தற்போதைய இந்தச் சிறு விலையேற்றத்திற்குக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply