பிரபலத் தனியார் விமான சேவை நிறுவனமான இண்டிகோ (IndiGo), தனது பயணக் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எரிபொருள் விலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு நாளை முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
பண்டிகைக் காலம் தொடங்கும் இந்தச் சமயத்தில் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ள இந்த விலை உயர்வு, அடிக்கடி விமானத்தில் பயணிப்போருக்கும், விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டிருக்கும் பயணிகளுக்கும் பெரும் அதிர்ச்சியையும் கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply