கோவையில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்: செல்வபுரம் பகுதியில் ஆட்சியர், மேயர் ஆய்வு

Spread the love

கோவை மாநகராட்சி 80-வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம், அசோகர் நகர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி, திமுக பொறுப்பாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் மாரிசெல்வன் முன்னிலையில் சிறப்பு வாகனங்கள் மூலம் தேங்கிய மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *