ஹோர்முஸ் நீரிணையை ‘டிரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற பரிந்துரை: சர்ச்சை வெடித்தது!

Spread the love

ஈரானுடனான ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை ‘டிரம்ப் நீரிணை’ (Trump Strait) என பெயர் மாற்றக் கோரி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இப்பகுதி தற்போது அமெரிக்காவின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட டிரம்ப், இதற்கு ஆதரவாக வரைபடங்களைப் பகிர்ந்துள்ளார். இருப்பினும், இந்நடவடிக்கை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனோபாவத்தைக் காட்டுவதாக விமர்சகர்கள் சாடியுள்ளனர்.

மற்றொரு புறம், இந்த நீர்வழிப்பாதை இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று ஈரானும், போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.