அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

Spread the love

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நேரு நகர் லயன்ஸ் சங்கம், ரத்தினம் குளோபல் யுனிவர்சிட்டி, கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை, பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவ முகாம்  ரத்தினம் கல்லூரி வளாகத்தில் உள்ள சி.வி. ராமன் கட்டிடத்தில் நடைபெற்றது.

விஷன் மாவட்டத் தலைவர் MJF ரமேஷ்குமார் தலைமையில், ரத்தினம் கல்லூரி நிர்வாக மேலாண்மைத் துறைத் தலைவர் டாக்டர் M. கௌசல்யா தேவி மற்றும் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி ஜி.எம்.டி (GMT) ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இம்முகாம் நடைபெற்றது.

‘தர்மம் செய்’ ஆண்டின் மாவட்ட ஆளுநர் PMJF P.S. செல்வராஜ், முன்னாள் மாவட்ட ஆளுநரும் இந்திய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பழனிச்சாமி, முதலாம் துணை ஆளுநர் வழக்கறிஞர் சூரி. நந்தகோபால் மற்றும் ரத்தினம் குளோபல் யுனிவர்சிட்டி அறங்காவலர் (Trustee) டாக்டர் சீமா செந்தில் ஆகியோர் இணைந்து மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தனர்.

மாவட்டச் செயலாளர் முருகேசன், மகளிர் தின மாவட்டத் தலைவர் சுப்பு செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், முகாமுக்கான ஏற்பாடுகளை நேரு நகர் லயன்ஸ் சங்கச் செயலாளர் லயன் செந்தில்குமார், லயன் சூரியபிரகாஷ், லயன் கிரீஷ், லியோ மாவட்டத் தலைவர் ஜெட்டின், வாசன் கண் மருத்துவமனை பி.ஆர்.ஓ (PRO) பாபு, வி.எஸ். பல் மருத்துவமனை பி.ஆர்.ஓ சுனில் மற்றும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இவ்விலவச மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.