நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி: சவரனுக்கு ரூ.920 உயர்ந்த தங்கம் விலை!

Spread the love

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 24) அதிரடியாக உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய விலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.115 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,715-க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.920 உயர்ந்து ரூ.92,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனையாகிறது.