தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Spread the love
கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து சரிவைக் கண்டு வந்த தங்கத்தின் விலைக்கு திடீரெனப் பிரேக் விழுந்து, மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது நகைப்பிரியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து படிப்படியாக சரிந்து, நான்கு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,280 வரை குறைந்திருந்த நிலையில், செப்டம்பர் 25 அன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.14,010-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,12,080-க்கும் விற்பனையாகிறது.
அதேவேளையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி, நேற்றைய நிலையிலேயே ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு மற்றும் மத்திய அரசின் இறக்குமதி வரி குறைப்பு தொடர்பான தகவல்கள் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் விலை உயர்ந்து வருவது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.