தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் முதல்வர் ஜோசப் விஜய் சமீபத்தில் மேற்கொண்ட லண்டன் சுற்றுப்பயணம் மூலமாக சுமார் 15,000 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அவரது அடுத்தகட்ட வெளிநாட்டுப் பயணம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்ற (WEF) ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அதன் தலைவர் அலோயிஸ் விடுத்த அழைப்பை ஏற்று, முதல்வர் விஜய் அடுத்த ஆண்டு ஜனவரி 17 அன்று சுவிட்சர்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ளார். முதல்வரின் இந்த இரண்டாவது உலகளாவியச் சுற்றுப்பயணம், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதோடு, மாநிலத்திற்கான சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Reply