Category: Politics
-
கோவையில் நாளை நடைபெறும் பாஜக புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.இங்கு அவருக்கு கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் மேல தாளங்களுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில்துறையினர்…
-
அதிமுகவைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தற்போது, இந்த சோதனை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக, தனி வருமானத்தை விட அதிக அளவில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன்…
-
கோவை நல்லாம்பாளையத்தில் இரண்டு நாள் பிரம்மஸ்தான மஹோத்சவம் நிறைவடைந்தது. கோவை– இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் இடம்பெற்ற தமது அருளுரையில் அம்மா பின்வருமாறு கூறினார், “இப்படைபில் உள்ள அனைத்துயிர்களுக்கும் இடையே ஒரு தாள லயம் உள்ளது. நாம் தனிப்பட்ட தீவுகள் அல்ல, மாறாக ஒரே நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் ஆவோம். முதலில் நாம் மாறுவதற்கு முயல வேண்டும். பின் நம்மைச் சுற்றி உள்ள உலகை நாம் மாற்றலாம். பலர் சிந்திக்காமல் செயல்படுகிறார்கள், செயல்படாமல்…
-
The Prime Minister of India, Narendra Modi, has wished for the Mahashivratri festival to be held under the leadership of Sadhguru at the Isha Yoga Center in Coimbatore. In a letter to Sadhguru, the Prime Minister has said, “Heartiest congratulations to everyone at Isha Foundation and to the countless devotees of Lord Shiva who are…
-
டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தேர்தலின் போது கடந்த ஜனவரி 31 அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது துவாரகாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் டெல்லி தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பாஜக ஆட்சி அமைந்தவுடன் மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி அறிக்கை ஒன்றை வெளியீட்டு கேள்வியை எழுப்பி இருந்தது.…
-
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல் கதவுகள் வழியாக, உதவி கேட்டு நின்றிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதில் சிலர் தங்கள் ஹோட்டல் அறை ஜன்னல்களில் உதவி கோரிய அவர்கள்,…
-
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை உயர்த்தி அதன் மூலம் நாட்டின் வருவாயை பெருக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தில், அவரை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார்…
-
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை அமைத்தல், கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தல், உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கழகத்தின் புதிய இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில் ஊராட்சி, நகர மற்றும் மாநகராட்சிகள் மட்டத்தில் அதிகளவில் விளையாட்டு வீரர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான…
-
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, மற்றும் பல்வேறு மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மும்மொழி கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் பின்னணி, மத்திய அரசு மும்மொழி கொள்கையை ஏற்றினால் மட்டும் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்குவதாக தெரிவித்து, அதற்கான படி…
-
கோவை மாமன்ற 47வது வார்டு உறுப்பினர் பிரபாகரன் தமிழக தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தற்சமயம் கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாக பகுதியில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 167. 25 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதத்தில் இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என தெரிகிறது. ஆனால், பூங்கா பணிகள் அவசரகதியில் தரமின்றி…