Category: Politics

  • தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக சட்டப் பேரவையில் 2021-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறையின் அறிவிப்பின் படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்களிக்கும் நபர்களுக்காக ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் பசுமை சாம்பியன் விருது 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது பெறுவதற்காக மாநில அளவில் 100 தனிநபர்கள்…

  • பாஜக கூட்டணியில் சேருவதற்காக அதிமுகவினர் முயற்சி செய்து வருகிறார்கள்- அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “முன்னிலையில், பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று விமர்சித்தவர்கள் மற்றும் பாஜகவால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் எனக் கூறியவர்கள், இன்று பாஜக கூட்டணியில் சேருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். தற்போதைய அரசியல் சூழலில், டிடிவி தினகரனை கூட்டணியில் இருந்து விலக்குவது சாத்தியமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். கூட்டணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. உதயநிதி நடத்திய நீட் தேர்வுக்கு…

  • கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில், கோவையின் காவல் தெய்வமாக மக்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் விமர்சையாக நடத்தப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும், புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் பவனி வந்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா…

  • பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் – பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

    கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால், புதன்கிழமை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிறுத்தை இருப்பதை கவனித்துள்ளனர். மேலும், மைதானத்தில் பயிற்சியில் இருந்த மாணவர்களும் சிறுத்தையை பார்த்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு, அந்நாளிற்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டு, ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேசமயம், வனத்துறையினர் சிறுத்தையை…

  • ​எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா –  மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

    அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…

  • தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் “டிராமா” செய்கிறது -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் “டிராமா” செய்கிறது என்றும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும் எனவும், கோவை MyVi3 நிறுவன குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், 50…

  • முதலமைச்சர் பூச்சாண்டி காட்டுகிறார் -வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

    பாஜக எம்.எல்.ஏ மற்றும் தேசிய மகளிரணி தலைவரான வானதி ஸ்ரீநிவாசன், தமிழக முதல்வர் எந்த ஆதாரமுமின்றி “பூச்சாண்டி காட்டுகிறார்” எனவும், அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் ஒரே அணியில் கட்சிகள் நிற்பது போன்ற “நாடகம்” நடத்துகிறார் எனவும் குற்றம் சாட்டினார். கோவையில் நிதி மேலாண்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மகளுக்கும் வங்கி கணக்கு துவக்கி, பெண்களை தன்னிறைவு அடையச் செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய இலட்சியமாக உள்ளது. இதற்காக ‘வளம்’ இயக்கம் மூலம்…

  • முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் தாயாரிடம் ஆசி பெற்று கேக் வெட்டினார்

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனிடையே, குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோபாலாபுரம்…

  • போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலஸ்கியுடன் டிரம்ப் வார்த்தை போர்

    ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் – உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிவுற்றது. இந்த சந்திப்பின் போது, ஜெலென்ஸ் கியின் தவறான நடத்தையை டிரம்ப் குற்றம் சாட்டியதோடு, அவரது நடவடிக்கை மூன்றாம் உலகப் போரை தொடங்க வைக்கும் என்று கூறியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை காரசார விவாதமாக மாறியது. இந்த சமயத்தில்…

  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா – சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பங்கேற்பு

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி காவல்துறை சோதனை சாவடி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் பேசினார். உடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ கே செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஓகே சின்னராஜ்,  சிறப்பு பேச்சாளர்கள் சிட்கோ சீனு, முத்து மாணிக்கவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் விக்னேஷ், சார்பணி…