Category: Politics
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள், சி.பி.சி.ஐ.டி போலீசாரின் சம்மனுக்கு இணங்க செவ்வாய்க்கிழமை ஆஜராகியுள்ளார். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 19 அன்று சசிகலா கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தபோது, பங்களாவின் அறைகளை பார்வையிட்ட பிறகு ஏதேனும் கேள்விகள் எழுப்பியாரா…
-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்ட விவகாரத்தை தி.மு.க. எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக கூறுவது தவறானது என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டு மாணவர்களை தி.மு.க. அரசியல் நோக்கத்திற்காக தவறாக வழிநடத்துகிறது என்றும், மாநில அரசு மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார். தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு எதிராக, கோவையில்…
-
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தார். மொழி பிரச்சனை தொடர்பாக, மத்திய அரசு தமிழ்நாட்டில் மொழி திணிப்பு முயற்சிகளை மேற்கொண்டால், அது புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என அவர் எச்சரித்தார். தமிழ்நாட்டில் அண்ணா காலத்திலிருந்து இரு மொழிக் கொள்கை நிலவுகிறது, மேலும் விருப்பமுள்ளவர்கள் மூன்றாவது அல்லது நான்காவது மொழியை கற்றுக்கொள்ளலாம் என்றார். மத்திய அரசு திணிப்பு நடவடிக்கைகளை…
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதை வரவேற்றார். அவர் மேலும், “இதில் முதன்மையான பங்கு எனக்கு இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள், ஆனால் நான் தனியாக நிற்பேன். நான் மட்டுமே உறுதியுடன் நிற்கிறேன்,” என்று தெரிவித்தார். சீமான், கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவரான…
-
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து தாம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தெளிவாக கூறியிருப்பதை, அ.தி.மு.க பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வலியுறுத்தினார். விவாதம் (Debate) ஏற்படுத்தவே சிலர் திட்டமிட்ட முறையில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். “நான் கூறிய கருத்துகளையும், எடப்பாடியார் தெரிவித்த கருத்துகளையும் திரித்து, வாதம் செய்யவே சிலர் முயற்சி செய்கிறார்கள். பாஜக குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன், அதேபோல் எடப்பாடியாரும் அ.தி.மு.க குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி…
-
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து த.வெ.க இயங்கி வருகிறது. இதற்காக, முழு மூச்சில் அந்த கட்சி களம் இறங்கியுள்ளது. கூட்டணிக்கான பேரங்களையும் கவனமாக ஆராய்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவர திட்டங்களை போட்டு வருகிறது. ரமலான் மாதத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் நேற்று இஸ்லாமிய மக்களுடன் நோன்பு திறப்பு விழாவில் விஜய் பங்கேற்றார். இப்படியாக த.வெ.க கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் களத்தில் முன்னோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை நடந்த…
-
தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க…
-
கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பத்தொன்பதாம் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமையேற்று அனைத்து பட்டதாரிகளையும் வாழ்த்தி, கல்வியில் சிறந்து முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார். மேலும் தனது உரையில், கல்விசார் சிறப்பு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்கும் பட்டதாரிகளை வடிவமைப்பதில் SRIT பெருமை கொள்கிறது என்று…
-
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் மிகப்பெரிய இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், தவெக சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு, அனைவரும் ஒன்றாக உணவருந்தினர். நோன்பு திறப்பு விழா முடிந்த பிறகு, தவெக தலைவர் விஜய், இஸ்லாமிய மக்களைப் பிரமிப்பூட்டும் வகையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது: “என்…
-
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் 56-வது ஆண்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு பாஜக சார்பில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அவரை வரவேற்கும் வகையில் பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், ஒரு போஸ்டரில் அமித்ஷாவின் படத்திற்குப் பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றுள்ளது, இது பாஜகவினரிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக…