Category: General
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி கலையரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். தேகா ஆர்கானிக்ஸ் நிறுவனர் ஆர்த்தி ரகுராம், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் மேம்பாட்டு மைய சாதனை மலரை…
-
கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பத்தொன்பதாம் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமையேற்று அனைத்து பட்டதாரிகளையும் வாழ்த்தி, கல்வியில் சிறந்து முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார். மேலும் தனது உரையில், கல்விசார் சிறப்பு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்கும் பட்டதாரிகளை வடிவமைப்பதில் SRIT பெருமை கொள்கிறது என்று…
-
கோயம்புத்தூர், தமிழ்நாடு இந்தியா – மார்ச் 8, 2025 – BRJ ஆர்த்தோசென்டர் & MAK மருத்துவமனை சர்வதேச மகளிர் தினத்தன்று இலவச மெகா மருத்துவ முகாமை வெற்றிகரமாக முடித்தது, கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விரிவான மருத்துவ சேவைகளை வழங்க உதவியது. மார்ச் 8, 2025 அன்று BRJ ஆர்த்தோசென்டர் & MAK மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க விரும்பும் பெண்கள் குறிப்பிடத்தக்க…
-
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் மிகப்பெரிய இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், தவெக சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு, அனைவரும் ஒன்றாக உணவருந்தினர். நோன்பு திறப்பு விழா முடிந்த பிறகு, தவெக தலைவர் விஜய், இஸ்லாமிய மக்களைப் பிரமிப்பூட்டும் வகையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது: “என்…
-
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் 56-வது ஆண்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு பாஜக சார்பில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அவரை வரவேற்கும் வகையில் பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், ஒரு போஸ்டரில் அமித்ஷாவின் படத்திற்குப் பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றுள்ளது, இது பாஜகவினரிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக…
-
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக சட்டப் பேரவையில் 2021-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறையின் அறிவிப்பின் படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்களிக்கும் நபர்களுக்காக ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் பசுமை சாம்பியன் விருது 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது பெறுவதற்காக மாநில அளவில் 100 தனிநபர்கள்…
-
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “முன்னிலையில், பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று விமர்சித்தவர்கள் மற்றும் பாஜகவால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் எனக் கூறியவர்கள், இன்று பாஜக கூட்டணியில் சேருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். தற்போதைய அரசியல் சூழலில், டிடிவி தினகரனை கூட்டணியில் இருந்து விலக்குவது சாத்தியமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். கூட்டணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. உதயநிதி நடத்திய நீட் தேர்வுக்கு…
-
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் சார்பில் “அவலாஞ்ச்” விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் சென்னையில் உள்ள யுபிஎஸ் இந்தியா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனர் வைஜயந்தி ஸ்ரீனிவாசராகவன் கலந்து கொண்டு பேச்சாற்றல், தொழிலில் முன்னேறுவதற்கான திட்டமிடுதல், மனநிறைவு, தொடர் கற்றல், குணம், தங்களைக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவிகள் தனி வாழ்விலும் தொழிலும் முன்னேற இந்த இயல்புகள் உதவும் என்றார். முன்னதாக விழாவிற்குத் தலைமை…
-
கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில், கோவையின் காவல் தெய்வமாக மக்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் விமர்சையாக நடத்தப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும், புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் பவனி வந்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா…
-
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால், புதன்கிழமை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிறுத்தை இருப்பதை கவனித்துள்ளனர். மேலும், மைதானத்தில் பயிற்சியில் இருந்த மாணவர்களும் சிறுத்தையை பார்த்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு, அந்நாளிற்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டு, ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேசமயம், வனத்துறையினர் சிறுத்தையை…