Category: General

  • தமிழகத்திற்கும் சம அளவு நிதி வழங்கப்பட வேண்டும் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தார். மொழி பிரச்சனை தொடர்பாக, மத்திய அரசு தமிழ்நாட்டில் மொழி திணிப்பு முயற்சிகளை மேற்கொண்டால், அது புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என அவர் எச்சரித்தார். தமிழ்நாட்டில் அண்ணா காலத்திலிருந்து இரு மொழிக் கொள்கை நிலவுகிறது, மேலும் விருப்பமுள்ளவர்கள் மூன்றாவது அல்லது நான்காவது மொழியை கற்றுக்கொள்ளலாம் என்றார். மத்திய அரசு திணிப்பு நடவடிக்கைகளை…

  • எங்கு நின்றாலும் நான் தனித்து நிற்பேன் – கோவையில் சீமான் பேட்டி

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதை வரவேற்றார். அவர் மேலும், “இதில் முதன்மையான பங்கு எனக்கு இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள், ஆனால் நான் தனியாக நிற்பேன். நான் மட்டுமே உறுதியுடன் நிற்கிறேன்,” என்று தெரிவித்தார். சீமான், கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவரான…

  • கோவையில் ஆன்லைன் மோசடி- இரண்டு பேர் கைது

    கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் கண்ணன் மற்றும் ராஜசேகர் என்ற சகோதரர்கள், வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி பலரை அதில் சேர்த்தனர். அவர்கள், கேரளா மாநில லாட்டரி குழுக்களை ஒத்த மாதிரியாக, கடைசி மூன்று எண்களுக்குப் பரிசு வழங்குவதாக குழுவில் அறிவித்தனர். இதன்வழியாக பலர் தினசரி பணத்தை இந்த இருவருக்கும் அனுப்பினர். பெரும்பாலானவர்களுக்கு பரிசு கிடைக்காமல், சிலருக்கு மட்டுமே பரிசுத்தொகை ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்படுவதாக தகவல் ரத்தினபுரி காவல் துறைக்கு…

  • கூட்டணி குறித்து எடப்பாடியாரும் நானும் தெளிவாக தெரிவித்துள்ளோம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து தாம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தெளிவாக கூறியிருப்பதை, அ.தி.மு.க பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வலியுறுத்தினார். விவாதம் (Debate) ஏற்படுத்தவே சிலர் திட்டமிட்ட முறையில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். “நான் கூறிய கருத்துகளையும், எடப்பாடியார் தெரிவித்த கருத்துகளையும் திரித்து, வாதம் செய்யவே சிலர் முயற்சி செய்கிறார்கள். பாஜக குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன், அதேபோல் எடப்பாடியாரும் அ.தி.மு.க குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி…

  • திமுக ஆட்சியை மாற்றுவோம்… முதல் முறையாக திமுக பெயரை சொன்ன விஜய்

    வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து த.வெ.க இயங்கி வருகிறது. இதற்காக, முழு மூச்சில் அந்த கட்சி களம் இறங்கியுள்ளது. கூட்டணிக்கான பேரங்களையும் கவனமாக ஆராய்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவர திட்டங்களை போட்டு வருகிறது. ரமலான் மாதத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் நேற்று இஸ்லாமிய மக்களுடன் நோன்பு திறப்பு விழாவில் விஜய் பங்கேற்றார். இப்படியாக த.வெ.க கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் களத்தில் முன்னோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை நடந்த…

  • கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கை… பைசன் படத்தின் கதை என்ன?

      இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள ’பைசன்’ (காளமாடன்) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன்’ இந்த படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கலையரசன், பசுபதி, லால், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே…

  • பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தானியர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடையா?

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க உள்ளதாக புதிய தகவல் பரவி கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களை காரணம் சுட்டி காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்காவுக்கு வந்தால் சில பயங்கரவாதிகள் ஊடுருவலாம். அப்படி நடந்தால் அது தங்களுடைய நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற காரணத்தால் இந்த முடிவை அமெரிக்க தற்போது எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்கத்தின்…

  • அங்கம் முழுவதும் தங்கம் : விக்ரம் பிரபு ஜோடி பார்த்த கில்லாடி வேலை

    துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யபட்டார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது, விசாரணைக்காக ரன்யா ராவின் மொபைல்…

  • சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்… பிரபல ஜோதிடர் கணிப்பு

    ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்று துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று ஏபிரிவில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் வெற்றிப் பயணத்தை நான்கு போட்டிகளாக மாற்றி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. எட்டு அணிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி…

  • மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம் – மத்திய இணை அமைச்சர் முருகன்

    தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த ​இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க…