Category: crime
-
கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 3.54 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெர்க்ஸ் பள்ளி அருகே பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏம்.வி எக்ஸ்பிரஸ் என்ற தனியார் சொந்தமான ஆம்னி காரை பறக்கும் படை…
-
கோவை துடியலூர் அருகே காசிநஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் இன்று அதிகாலை மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்ற 35 வயது மதிக்கத்தக்க கூலித் தொலிலாளியை மர்ப நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். துடியலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலை நடந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ஜெய்கணேஷ் 35 வயதான இவர் கோவை துடியலூர் அருகே…
-
போலீஸ் அதிகாரிகள் என கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் கோவையில் அதிகரித்து வருகின்றன. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, “அண்மைக் காலமாக பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.அதன்படி அந்த கும்பலில் உள்ள நபர்கள் சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர். அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக…
-
கோவை சோமையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிஎஸ்பிபி பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மிரட்டல் வந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளி நிர்வாகம் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. மேலும் பெற்றோர்களும் பதற்றத்துடன் வந்து அவர்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே வடவள்ளி போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பள்ளி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு சென்றனர். அன்றைய தினம் சென்னையில் இயங்கி வரும் பிஎஸ்பிபி பள்ளிக்கும்…
-
கோவை மகளிர் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹரோனிமஸ் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது . கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்த நிலையில் ,…
-
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த 9ம் தேதி நடந்த சாலை விபத்தில் 3 வயது குழந்தை மற்றும் தந்தை உயிரிழந்த நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடலூர் நகராட்சியில் குடிநீர் பணியாளராக பணியாற்றி வந்தவர் அசோக்குமார்(32). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு 3 வயதில் சர்வந்த் என்ற குழந்தை உள்ளது. இவர்கள் மூவரும் கடந்த 9ம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாகனம்…
-
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல்துறையில் கோவை பாமக சார்பில் கோவை பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் புகார் மனு அளிக்கபட்டது. மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஒருங்கினைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆனையரிடம் மனு அளிக்கபட்டது. அம்மனுவில் மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவருவதுடன் காவல்துறையினரையும்…
-
மை வி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்புவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்ற அதன் உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மை வி3 நிறுவனம் விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு…
-
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களிலும், கோவையில் 12 இடங்களிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் கைது…