Category: crime

  • கோவை அருகே வழக்கறிஞர் வெட்டி கொலை…..

    கோவை அருகே வழக்கறிஞர் வெட்டி கொலை – உடலை கைப்பற்றிய போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த மைலேரிபாளயத்தில் வழக்கறிஞர் எஸ். உதயகுமார் (48) கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த உதயகுமார், கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி டாக்டர் நித்யாவள்ளி, கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த…

  • யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்…….

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழாங்கி உள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் பெண் காவலர்களை சம்பந்தபடுத்தி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கோவை ‘சைபர் கிரைம்’காவல்துரையினர் அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு…

  • ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் போலியாக முழுநேரம் பணியாற்றும் பேராசிரியர்கள்! அண்ணா பல்கலைக்கழக ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் தகவல்…

    தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணி புரிவதாகவும், இது அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல் என  அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த 353 பேராசிரியர்களையும் விசாரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று அறப்போர் இயக்க நிர்வாகிகள்  தமிழ்நாடு அரசை வலியுறுத்தி…

  • கோவையில் கொரியர் கம்பெனி பெயரில் கொள்ளை – போலீசார் எச்சரிக்கை……….

    ஆன்லைன் வாயிலாக பல மோசடிகள் மூலம் அப்பாவி பொது மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து, பணம் பறிக்கும் கும்பல்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது அந்த பாணியை அவர்கள்,  சற்றே மாற்றி கொள்ளையடிக்கும்  நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன. அப்படி கோவையில்   நூதனமான கொள்ளை சம்பவங்கள்  திடுக்கிட வைக்கிறது. இந்த நிகழ்வுகள் காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. கோவை போத்தனூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, மொபைலில் அழைத்தவர், பிரபல கொரியர் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். தாங்கள் ரஷ்ய நாட்டிற்கு, தங்கள்…

  • எழும்பூர் பேரணியில் இயக்குநர் பா ரஞ்சித் பரபரப்பு பேச்சு…..

    நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு நேற்று இயக்குநர் பா ரஞ்சித் பேரணி நடத்தி உள்ளார். திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில்படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நீதி கேட்டு,  சென்னை எழும்பூர் லேங்க்ஸ் தோட்டச் சாலையில் இருந்து ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் வரையில் பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு பா.ரஞ்சித் தலைமை தாங்கினார். இந்த பேரணியில் பகுஜன் சமாஜ்…

  • கோவையில் போதைப்பொருள் விற்ற நடிகர்-நடிகைகள் கைது!

    கோவையில் மாநகரில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா மற்றும் போதை  மாத்திரைகள் விற்ற  மூன்று துணை நடிகர் மற்றும் இரு நடிகைகள் உட்பட ஐந்து பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொண்டு கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை சுங்கம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரி…

  • குற்ற சம்பவங்கள் : அதிகாரிகள் மாற்றம் தீர்வா….?

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள்  நிகழ்வது தொடர் கதையாக உள்ளன. உள்துறை பொறுப்பினையும் வகிக்கும் தமிழக  முதலமைச்சர் மு .க. ஸ்டாலினை , நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தும்   பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வல லைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில்  ஜெயக்குமார் மரணம்,பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது வீட்டின் பின்புறம்…

  • தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை….. – இபிஎஸ் விமர்சனம்

    திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு…. என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், கடந்த 24 மணிநேரத்துக்குள் தமிழகத்தில் நடந்த குற்ற செய்திகளை (செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல், புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை, தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை, தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய…

  • கோவில் நிதியில் சொகுசு கார்கள் வாங்குவது தவறு! அறநிலையத்துறைக்கு உச்சநீதி மன்றம் ஆணை

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் கிடைக்கப்பெறும் நிதியில் அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் வாங்குவது, சொகுசு காரியங்களுக்காக  பயன்படுத்து வது தவறு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பெரும்பாலான இந்து கோவில்கள் செயல்படும் நிலையில், பொதுமக்கள் கோவிலுக்கு வழங்கும் நிதியை திமுக அரசு முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ’கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு, கோயிலுக்குக் காணிக்கையாக கொடுத்த மாடுகளைக் காணவில்லை, கோயிலின் வைப்பு நிதி குறைந்துவிட்டது’  அறநிலையத் துறை மீதான குற்றச்சாட்டுகள் தற்போது விஸ்வரூபம் எடுத்து…

  • பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்டிராங்குக்கு பெரம்பூரில் மணி மண்டபம்- வழக்கறிஞர் அறிவிப்பு…!

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் அடையாளம் தெரியாத சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார் அவரது உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்தில் புதைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிபதி ஆம்ஸ்டிராங்க் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் புதைக்க அனுமதி அளித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. நீதிபதி அவ்வாறு கட்டுவதாக இருந்தால் அது குறித்து அரசிடம் மனு கொடுத்து அனுமதி…