சென்னையில் வருகின்ற அக்டோபர் 10 அன்று நடைபெற உள்ள ராகுல் காந்தி- மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியான மாணவர் குரல்(CHHATRON KI GOONJ) பற்றிய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் காமராஜ் பவனில் இன்று நடைபெற்றது.
அதில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா கூறிகையில்,
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் தற்போதைய மோடி மோடி தலைமையிலான பாஜக அரசு மாணவர்களுக்கு கொடுக்கும் தொல்லைகளைப் பற்றி ராகுல் காந்தி ஒருவர்தான் பெரிய அளவில் எடுத்துக்கூறி வருகிறார்.
நீட் தேர்வு வினாக்கள் கசிவு உட்பட நூற்றுக்கு மேற்பட்ட தேர்வு வினாத்தாள்கள் கசிவு மாணவர்களை, அவர்களது உழைப்பை வீணடிக்கும் விதமாகவும், அந்தப் படிப்புகளுக்கான கோச்சிங் சென்டர் கட்டணங்கள் நடுத்தர மக்கள் கூட நெருங்க முடியாத அளவுக்கு மிகவும் அதிகமாக உள்ளதும், அது வந்து வருங்கால மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக உள்ளது போன்ற பல விஷயங்களை கோட்டா பிரயாக்ராஜ் இந்தூர் கோட்டா கூட பல நகரங்களில் மாணவர்களை சந்தித்து அவரிடம் கலந்து உரையாடி வருகிறார் அந்த வகையில் தென்னிந்திந்தாவிலேயே முதல் முறையாக சென்னை தீவுத்திடலில் வருகின்ற பத்தாம் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அதற்கான பதிவுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்து வருகிறார்கள். காங்கிரஸ் மட்டுமே எதிர்கால இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குகின்ற மாணவர்களின் இளைஞர்களின் உரிமைகளுக்காக மோடி தலைமையிலானபாசிச பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது என்பதையும் எடுத்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட தலைவர் விஜயகுமார், வடக்கு மாவட்டத்தில் ரங்கராஜ் தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாநில ஆலோசனை குழு உறுப்பினர் எம் என் கந்தசாமி, மாநிலத் துணைத் தலைவர் அழகுஜெயபாலன், செயலாளர் காயத்ரி, விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சௌந்தர் குமார் இருகூர் சுப்பிரமணியம் சங்கர் மாவட்ட துணை தலைவர் பாஸ்கர் கருணாகரன் பரமசிவம் செல்வராஜ் பாசமலர் சண்முகம் ஜெர்ரி லூயிஸ் ரங்கநாதன் அரிமா ஆறுமுகம் சௌந்தர்ராஜன் ராஜமாணிக்கம் தங்கராஜ் ரங்கராஜ் ரமேஷ் சஞ்சய் காந்தி சுதன் முகமது கனி வின்சென்ட், கே ஆர் தாமஸ் பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.



Leave a Reply