தீபாவளி உணவுப் பொருட்களில் கலப்படமா? புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் வெளியீடு!

Spread the love

வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, விற்பனை செய்யப்படும் தீபாவளிப் பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர்கள் புகார் அளிக்க தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை புதிய புகார் வழிகளை அறிவித்துள்ளது.

பலகாரங்களில் சுகாதாரமின்மை, காலாவதியான பொருட்கள் அல்லது தரம் குறைந்த கலப்படங்கள் கண்டறியப்பட்டால், பொதுமக்கள் உடனடியாகப் பின்வரும் வழிகளில் புகார் பதிவு செய்யலாம்:

  • வாட்ஸ்அப் எண்: 94440 42322

  • மொபைல் செயலி: N Food Safety Consumer App

  • இணையதளம்: foodsafety.tn.gov.in

பொதுமக்கள் தங்களின் புகார்களைப் புகைப்பட ஆதாரங்களுடன் அனுப்பி வைக்கலாம் எனவும், தரம் குறைந்த உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *