,

இசைக் குழுவினருக்கு பாராட்டு

Spread the love

இசைஞானி இளையராஜா இசைக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வெள்ளி மற்றும் தங்க நகை சங்கத்தினர் கௌரவித்தனர்

கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் கடந்த வாரம் இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சி பிரம்மண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மெளனராகம் முரளி மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசை குழுவினருக்கும் கோஸ்வான் வெள்ளி நகை மாளிகை குழுவிர் மற்றும் கோயமுத்தூர் தங்க நகை தயாரிப்பாளர் சங்கம் தலைவர் முத்து வெங்கட்ரமணன் மற்றும் இயக்குனர் சாய் பாலாஜி இணைந்து கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அலுவலகத்தில் பாராட்டு தெரிவித்து இசை குழுவினரை கௌரவித்தனர்.

மௌனராகம் ஒருங்கிணைப்பாளர் முரளிக்கு காமதேனும் வெள்ளி சிலையும் மற்றும் சக இசை குழுவினருக்கு வெள்ளி விளக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து இசைஞானி இளையராஜாவின் அனுபவங்கள் மற்றும் நடந்து முடிந்த இசை நிகழ்ச்சி அனுபவம் குறித்து எடுத்துரைத்தனர்.

தொடர்ச்சியாக இசைஞானி இளையராஜா குழுவில் இருக்கும் ரம்யா, பாலா, அருண், விக்னேஷ் உள்ளிட்ட பாடகர்கள் பாடல்கள் பாடி காண்போரை கவர செய்தனர்.