,

கே.ஜி.மருத்துவமனையின் 50வது ஆண்டு விழா

kg hospital
Spread the love

கே.ஜி.மருத்துவமனை யின் 50வது ஆண்டு விழா, தனியார் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இந்திய ஹெல்த்கேர் வழங்குனர்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் கிர்தர் கியானி 50ம் ஆண்டு மலரை வெளியிட்டு பேசுகையில்: மருத்துவத்துறையில் கே.ஜி.மருத்துவமனை 50 ஆண்டுகள் சேவை செய்து, சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற சேவைகளை, சில மருத்துவமனைகள் மட்டும்தான் செய்ய முடியும். இந்த சாதனை மேலும் தொடர வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவமனைகள் உள்ளன. இந்திய அளவில் மருத்துவத்துறையில் கோவை, முதன்மையான நகரமாக விளங்குகிறது என்றார்.

நிகழ்ச்சியில் மருத்துவர் கள், தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் அவைத்தலைவர் மகேஷ் வர்மா, அசோசியேஷன் ஆப் ஹெல்த்கேர் புரொவைடர் சங்கத்தின் பொது இயக்குநர் ஜெனரல் கிர்தர் கியானி மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர் பேராசிரியர் மீனு பாஜ்பாய் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம், நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.