முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான Park CodeWar 2.0- போட்டியில் வென்ற மாணவர்களுக்கு HCL மென்பொருள் நிறுவனம் வேலை வாய்ப்பு உறுதிமொழி
கோவை 26 Mar 2025 : பார்க் கல்வி குழுமத்தில் அனைத்து முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான CodeWar 2.0 என்னும் இறுதி பன்மொழி குறியீட்டு கோடிங் போட்டி, 26 மார்ச் 2025 அன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பெரும் ஆர்வத்துடன் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகளில் இருந்து 1000 மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
மொத்தம் ₹50,000 பரிசுத் தொகையுடன், முதல் மூன்று அணிகள் அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறன்களைக் அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டார்கள்.
₹25,000 கான முதல் பரிசை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மாணவர் குழு வென்றது.
இரண்டாம் பரிசு ₹15,000 நாலெட்ஜ் தொழில்நுட்பக் கல்லூரி, சோனா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குழு வென்றது.
மூன்றாம் பரிசு ₹10,000 பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குழு வென்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, HCL டெக்னாலஜிஸின் , குழு தொழில்நுட்ப மேலாளர், Dr P.Ilango, தனது உரையின் முடிவில், ஒரு அற்புதமான அறிவிப்பை வெளியிட்டார். முதல் முறையாக, இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு HCL மென்பொருள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான உறுதி மொழியை அறிவித்தார்.
இந்தப் போட்டியின் விழாவிற்கு தலைமை தாங்கிய பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தனது உரையில், இந்த வேலை வாய்ப்பு உறுதிமொழி அறிவிப்பு போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு மிகவும் உற்சாகத்தையும் அவர்கள் திறமைக்கு மதிப்பளிப்பதாகவும் அமைந்ததாக பெருமையுடன் தெரிவித்தார்
Leave a Reply