,

தயார் நிலையில் ரேஷன் கார்டுகள்… அமைச்சர் கண் அசைத்தால்தான் கிடைக்குமா?

ration card
Spread the love

கோவை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் புதிதாக ரேசன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் மக்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக விண்ணப்பித்த ரேஷன் அட்டைதாரர்களின் செல்போனுக்கு உங்களுடைய ரேஷன் கார்டு ரெடியாக உள்ளது. அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ரேஷன் கார்டு எண்ணுடன் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் சம்பந்தப் பட்ட தாலுக்கா அலுவலகங்களில்நேரில் சென்று கேட்டால், இதுவரை உங்களுடைய ரேசன் ஸ்மார்ட் கார்டு எங்களுக்கு வரவில்லை. ஆனால் உங்களுக்கு எஸ் எம் எஸ் வந்துள்ளது.
கார்டு வந்தவுடன் உங்களுக்கு நாங்கள் போன் செய்கிறோம் என்று கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் , கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் புதிதாக ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் கடந்த நவம்பர் மாதமே புதிதாக ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வந்துள்ளன.
கடந்த மூன்று மாதங்களாக கோவை மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜியின் அனுமதிக்காக ரேஷன் கார்டுகளை வழங்காமல் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அமைச்சர் எப்போது அனுமதி அளிப்பார்? எப்போது எங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும் என்று பொதுமக்கள் விடை தெரியாமல் உள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் முதல் புதிதாக தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்களுக்கும் கட்டாயமாக ரேஷன் கார்டு தேவைப்படுகிறது. இதனல்,தங்களுக்கு ரேஷன் பொருள் வழங்க விட்டாலும் பரவாயில்லை ரேஷன் கார்டு கிடைத்தால் மட்டும் போதும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் பத்தாயிரம்
கார்டுகள் தயாராக உள்ளன. சூலூர், மேட்டுப்பாளையம் , கோவை வடக்கு தாலுக்கா அலுவலகங்களில் 1500 கார்டு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.