எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி நிறுவனர் நாள் விழா கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார்.
விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் சி.கோபிநாத் கலந்து சிறப்பு சொற்பொழிவாற்றினார். பின்னர் கோவை கே.பி.ஆர்., குழும நிறுவனங்களின் தலைவர் கே.பி. ராமசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி 25 ஆண்டுகள் நிறைவு செய்த மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் 14 பேரை கௌரவித்து விருதுகள் வழங்கினார். முடிவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.
Leave a Reply