அவிநாசி கிழக்கு ரோட்டரி, அவிநாசி கிழக்கு ரோட்டராக்ட், அரவிந்த் கண் மருத்துவமனை, ரேவதி மெடிக்கல் சென்டர் திருப்பூர், மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் கவுன்செல்லிங் சென்டர் திருப்பூர் இணைந்து, தண்டுக்காரம்பாளையம் ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம், இலவச பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஈ.சி.ஜி. முகாம், மற்றும் பொது மனநல ஆலோசனை முகாம் நடத்தினர். இதில் 103 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 32 பயனாளிகளுக்கு குறைந்த விலையில் கண்ணாடி வழங்கப்பட்டது, மற்றும் 9 பயனாளிகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரோட்டரி சார்பாக இதயம் காப்போம் பேருந்தின் மூலம் இதய சுருள் படம், சர்க்கரை பரிசோதனை இலவசமாக வழங்கப்பட்டது.
தண்டுக்காரம்பாளையம் ஊராட்சியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

Leave a Reply