, ,

கோவை கொடிசியாவில் 10வது ஷாப்பிங் திருவிழா

Codissia Shopping Festival
Spread the love

கோவை கொடிசியாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை 12 நாட்களுக்கு ‘கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா நடைபெற உள்ளது.
கொடிசியா சார்பில் பத்தாவது முறையாக நடைபெறும் இந்த ஷாப்பிங் திருவிழாவில் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் இருந்து நகைகள், பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையல் சாதனங்கள், கைவினைப் பொருட்கள், பர்னிச்சர் என 380 ஸ்டால்களில் 310 கண்காட்சியாளர்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர்.
மேலும் இந்த ஷாப்பிங் திருவிழாவில் 17 பல்சுவை உணவு ஸ்டால்களும் இடம்பெறும். இத்துடன் பல்வேறு வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இத்துடன் குழந்தைகள் விளையாடி மகிழ பல்வேறு விளையாட்டுக்களையும் விளையாட அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த முறை 10 நாட்கள் நடைபெற்ற கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழாவில் 90,000 பேர் வருகை புரிந்தனர். இம்முறை 1.25 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 5 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.