ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் கார்ல்சன் மோதி கையிலிருந்து போன பட்டம்.. இன்று குகேஷ் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தொம்மராஜு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். குகேஷ் மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார். அவருக்கு 18 வயதே ஆகிறது.
முன்னதாக இந்தியாவில் இருந்து விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார். அவருக்கு அடுத்தபடியாக குகேஷ் அந்த இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக தன்னிடம் தோற்ற சீனா வீரர் டிங்கை குகேஷ் வெகுவாக பாராட்டினார். குகேசுக்கு இரண்டரை மில்லியன் டாலர் பரிசுத்தொகை கிடைத்தது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் ஆகும். பணம் இரண்டாம்பட்சம். ஒரு தமிழராக , இந்தியராக மொத்த நாட கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம்.அறிவு மற்றும் கணித்து ஆடும் திறனில் பெரும் அளவுகோலாக கருதப்படும் செஸ் விளையாட்டில் வெற்றிகளை குவிப்பதின் மூலம் ஆனந்த் மற்றும் குகேஷ் போன்ற வீரர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் பிறர் தலைநிமிர்ந்து பார்க்க வைத்துள்ளனர். இத்தகைய இமாலய சாதனையை படைத்த குகேசுக்கு இதயம் கனிந்த பாராட்டுகளை கோவை ஹெரால்ட் தெரிவித்து கொள்கிறது.
இதற்கிடையே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில், குகேஷ் தெம்மராஜூ , தமிழ்நாட்டில் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெலுங்கு மக்களை மேலும் மகிழ்ச்சி
யில் ஆழ்ந்தியுள்ளது என்று வாழ்த்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குகேசின் வளர்ச்சிக்கு ஆந்திர அரசோ, பவன் கல்யாணோ 10 பைசா செலவழித்தி ருப்பார்களா?வெற்றி பெற்றால் மட்டும் மொழியையும் இனத்தையும் குறிப்பிட்டு வாழ்த்துவதும் ஒட்டிக் கொள்வதும் எந்த விதத்தில் நியாயம்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர்; குகேஷ் குறித்து பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சை



Leave a Reply