,

திருப்பூரில் உலக இருதய தின கொண்டாட்டங்கள்

rotary club
Spread the love

திருப்பூரில் உலக இருதய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ரோட்டரி சங்கங்களான திருப்பூர் மிட்டவுன்,திருப்பூர், அவிநாசி கிழக்கு,திருப்பூர் ப்ரைம் மற்றும் ஜேசிஐ அவிநாசி ஜாஸ்மின்,மாவட்ட ரோட்ராக்ட் அமைப்பு,பஸ்ட் ஹார்ட் பவுண்டேசன் அமைப்பு,இந்திய மருத்துவ சங்கம் – திருப்பூர் கிளை,சாய் கிருபா சிறப்பு பள்ளி,குரு சர்வா சிஏ அகடமி,ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் ரேவதி கல்வி நிறுவனங்கள், விருக்ஷா சர்வதேச பள்ளி,பார்க்ஸ் கல்லூரி ஆகிய அமைப்பை சார்ந்த அனைவரும் பங்குக்கொண்டனர். விழிப்புணர்வு பேரணியானது திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி மாநகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது.

இந்நிகழ்வில் மாநகர மேயர் தினேஷ் குமார் , துணை மேயர் பாலசுப்ரமணியம்,உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை,ரேவதி மருத்துவமனை தலைவர் மருத்துவர்.ஈஸ்வரமூர்த்தி,பஸ்ட் ஹார்ட் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் சரவணன் மற்றும் ரோட்டரி,ரோட்டராக்ட்,ஜேசிஐ நிர்வாகிகள் , பள்ளி கல்லூரிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் , மருத்துவர்கள்,உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இதயத்தை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் ஆரோக்கியமான வாழ்க்கை பற்றியும் இருதய நிபுணர் மருத்துவர்.நாகராஜன் பேசினார் . நிகழ்வை திருப்பூர் மாவட்ட பஸ்ட் ஹார்ட் பவுண்டேசன் அமைப்பின் திருப்பூர் பொறுப்பாளர் சுபாஷ் செய்திருந்தார்.