ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை மற்றும் அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் இணைந்து 4வது தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் வடிவமைப்பு போட்டிகளை நடத்தியது.
இதன் தொடக்க விழாவிற்கு எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வியியல் இயக்குனர் டாக்டர் என்.ஆர். அலமேலு, தலைமை வகித்தனர. விழா முடிந்ததும் ஆர்.சுந்தர், டாக்டர் என்.ஆர். அலமேலு மற்றும் துறைத் தலைவர்கள் ஒவ்வொரு குழுவின் அரங்கு௧ளையும் பார்வையிட்டு தங்கள் வாழ்த்துக்களையும் ஊக்கத்தையும் வழங்கினர்.
முதல் நாளில், அணிகள் தொழில்நுட்ப ஆய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன, அங்கு நடுவர்கள் பைக்குகளின் பாதுகாப்பு, இயந்திரம் மற்றும் மின்சார தரநிலைகளை மதிப்பாய்வு செய்தனர். கோவை தெற்கு மோட்டார் வா௧ன ஆய்வாளர் விஸ்வநாதன் பங்கேற்று ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தினார்
இரண்டாவது நாளில் வடிவமைப்பு விளக்கக்காட்சி மற்றும் வணிகத் திட்ட விளக்கக்காட்சி உள்ளிட்ட நிலையான நிகழ்வுகள் இடம்பெற்றன, இதில் குழுக்கள் வடிவமைப்பு, வணிக உத்தி, செலவு மற்றும் புதுமை பற்றிய தங்கள் யோசனைகளை பகிர்ந்து கொண்டனர். பிரேக் & ஆக்சிலரேஷன் டெஸ்ட், ஆட்டோகிராஸ் டெஸ்ட், ஹில் க்ளைம்ப் டெஸ்ட் மற்றும் ஆஃப்-ரோட் டெஸ்ட் சோதனை உட்பட, மூன்றாவது நாளில் டைனமிக் நிகழ்வுகள் நடந்தன. பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணிகள் பந்தயத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அந்த இடத்திலேயே அறிவிக்கப்பட்ட ஒரு ஆச்சரியமான சோதனையுடன் இறுதி நாள் தொடங்கியது, அதை அணிகள் உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டன. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான எண்டூரன்ஸ் டெஸ்ட், சவாலான 5 கிமீ ஆஃப்-ரோடு பாதையில் வா௧ன பந்தயம் நடைப்பெற்றது. இது பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை வழங்கியது.
பரிசளிப்பு விழா மாலையில் எஸ்ஆர்ஐடி ஓபன் ஏர் ஆடிட்டோரியத்தில் ஆர்.சுந்தர் தலைமையில் நடைபெற்றது. டாக்டர் என்.ஆர். அலமேலு மற்றும் சுபாஷ் பில்லா, நிறுவனர் இமேஜின் டு இன்னோவேட், ஆகியோரும் பங்கேற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை குண்டூரில் உள்ள ஆர் வி ஆர் & ஜே சி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பால்கன் ரேசர்ஸ் வென்றனர்,
அவர்கள் ₹50,000 ரொக்கப் பரிசையும் கொச்சின் வொண்டர்லாவுக்கு இலவச அனுமதி சீட்டுகளையும் வென்றனர். கோவை இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த எம்.வி.டிரானிக்ஸ் அணி 25,000 ரூபாய் ரொக்கப் பரிசுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியின் மகளிர் அணி, சிறந்த பெண் ஓட்டுநர் மற்றும் சிறந்த பெண் கேப்டன் விருதுகளையும் பெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் வைவமைப்பு போட்டிகள்

Leave a Reply