,

ஆகஸ்ட் 31ம் தேதி அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும்….!

ration shop
Spread the love

ஆகஸ்ட் 31ம் தேதி  மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அன்றைய தினம்,  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. வழக்கமாக மாதத்தின் கடைசி பணி நாளில் எவ்வித பொருட்களும் விநியோகிக்கப்படாது. ஆனால், உணவு பொருள் தட்டுப்பாடு காரணமாக பலருக்கு பாமாயில், பருப்பு போன்றவைகள் கிடைக்காத நிலையில், அதை வழங்கும் வகையில்,  இந்த மாதம் கடைசி தேதியில் (31-08-2024) அனைத்து நியாய விலை கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.