கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக காவலில் எடுத்து மூன்றுநாள் விசாரிக்க ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை குற்றவியல் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக கோவை நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது.அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதுஎன்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது.அதனால்தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என ஆவேசமாக கூறியபடி சென்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், சவுக்கு சங்கர் மீது 90 நாட்களுக்கு முன்பு இரண்டாவது புதிய வழக்கு ஒன்று போட்டிருந்தார்கள்.காவல் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்கள்.அதற்காகத்தான் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.ஆரம்பத்தில் இருந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு என தருவோம் கூறியிருந்தோம்.தேவர் பற்றி தவறாக பேசியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வீடியோவில் அவ்வாறு இல்லை,நான்கு நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது போட்டிருந்த குண்டாசை ரத்து செய்தது.சங்கர் பேட்டியில் பொது அமைதிக்கு எந்த குந்தமும் விளைவிக்கப்படவில்லை என சில அறிவுறைகளை நீதிமன்றம் கூறி இருக்கிறது. அந்த வீடியோ வைத்து 17 வழக்குகள் போட்டார்கள், எங்கே வெளியில் வந்துவிடுவோரோ என அனைத்து வழக்குகளிலும் அவசரமாக கைது செய்யப்பட்டார்..
Leave a Reply