, ,

ஆந்திராவில் லாரி விபத்து – சாலையில் கட்டுகட்டாக சிதறிய  ரூ.7 கோடி

money
Spread the love

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஆந்திராவில் நான்காம் கட்டமாக  வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியும் , எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடையும் நிலையில் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்,ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜர்லா அருகே மினி லாரி கவிழ்ந்து அதிலிருந்து  ரூ.7 கோடி சாலையில் சிதறியது.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.