புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டை: எங்கே, எப்படிப் பதிவிறக்கம் செய்வது? அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Spread the love
தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 16.10.2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் 2,992 சிகிச்சை முறைகளுக்கான தொகுப்புக் கட்டண விவரங்கள் மற்றும் 46 சிறப்புச் சிகிச்சைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கான மருத்துவக் காப்பீட்டு மின்னணு அடையாள அட்டையை (E-Card) https://www.tn-nhis.net என்ற இணையதளத்தில் எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல் மற்றும் கட்டண வார்டு வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைகளின் விவரங்களை https://www.karuvoolam.tn.gov.in மற்றும் https://www.tn.gov.in/karuvolam ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அரசு ஊழியர்கள் 1800-210-7800 என்ற எண்ணிலும், ஓய்வூதியதாரர்கள் 1800-210-9800 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *