சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் போர் பதற்றம் தணியும் அறிகுறிகள் காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் சரிவைக் கண்டுள்ளது.
-
தங்கம் நிலவரம்: சென்னையில் இன்று (நவம்பர் 13) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.4,480 வரை குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
-
வெள்ளி நிலவரம்: தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.195-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,95,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் இந்தத் தற்காலிக விலை வீழ்ச்சி, திருமண விசேஷங்கள் மற்றும் சேமிப்புக்காக நகை வாங்கக் காத்திருந்தவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply