சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கோவையில் இரு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி பா.ஜ.க சார்பில் நிர்வாகிகள் விளக்கக் கூட்டம் நடத்தப்பட்டது.
SIR எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பாகப் பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வையும் இதன் மூலம் ஏற்படும் நன்மைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில், பா.ஜ.க சார்பில் நாடு தழுவிய அளவில் இக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, கோவை சூலூர் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய SIR விளக்கக் கூட்டம் ஒண்டிப்புதூர் மண்டலத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில், பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிரீத்திலட்சுமி, ராஜசேகரன், வேல்முருகன், கெளசல்யா மற்றும் ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர் மண்டல நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், SIR என்றால் என்ன, அதன் மூலம் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன மற்றும் இதனை எவ்வாறு பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.



Leave a Reply