தீபாவளிக்கு நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் 5ஆம் தேதியான இன்று, 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை:
22 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.285 அதிகரித்து ரூ.13,385 ஆக உள்ளது. இதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,07,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், சவரனுக்கு மொத்தம் ரூ.5,240 உயர்ந்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதி மட்டும் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, மொத்தம் ரூ.2,400 அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை!
தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கும் நிலையில், வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றித் தொடர்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.210-க்கும், ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.2,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Leave a Reply