நீலகிரி மலைவாழ் மக்களுக்குத் தீபாவளிப் பரிசுகள்! கோவை லயன்ஸ் கிளப்பின் அசத்தல் முயற்சி!

Spread the love

லயன்ஸ் பன்னாட்டு இயக்கம் மாவட்டம் 3242 சி மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சுப்ரீயர் கிங்ஸ் இணைந்து, நீலகிரி மாவட்டம் கொணவக்கரை ஊராட்சிக்குட்பட்ட மேல்கோப்பு கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்குத் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பி. எஸ். செல்வராஜ் தலைமை தாங்கி நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதில் சி.எஸ்.கே பட்டயத் தலைவர் வெங்கடகிருஷ்ணன், அன்பொழி அறக்கட்டளைத் தலைவர் கார்த்தி மற்றும் மேல்கோப்பு கிராமத் தலைவர் திப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.