அரோமா | ஒரு தொழில்முனைவுப் பயணம் மண்ணின் வேர்களில் இருந்து மக்களின் நம்பிக்கை வரை!

Spread the love

விவசாயக் குடும்பத்தில் தொடங்கி, உணவுத் துறையில் தனித்துவம் பதித்த அரோமாவின் பயணம்

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதன் உற்பத்தித் திறனும் விற்பனைப் பரப்பும் எடுத்துக்காட்டலாம். ஆனால், அதன் நிலையான அடையாளத்தை உருவாக்குவது மக்களிடம் அது பெற்றிருக்கும் நம்பிக்கையே. விவசாயிகளின் உழைப்பையும் நுகர்வோரின் எதிர்பார்ப்பையும் இணைத்து வளர்ந்த அரோமாவின் பயணம், இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

கோவை மாவட்டத்தின் கிராமப்புறச் சாலைகளில் சைக்கிளில் பால் கேன்களைச் சுமந்து சென்ற இளைஞரின் முயற்சி, இன்று ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுடன் இணைந்த உணவு நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது. அந்தப் பயணத்தைத் தொடங்கியவர் அரோமா குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர். பொன்னுசாமி.

விவசாயத்தை அறிந்தவர்; விவசாயியின் தேவையை உணர்ந்தவர்

1951-ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பொன்னுசாமி, உழைப்பின் மதிப்பையும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் இளம் வயதிலேயே அறிந்திருந்தார். பால் என்பது அவருக்கு விற்பனைக்கான பொருள் மட்டுமல்ல; கிராமப்புறக் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது.

அந்தப் புரிதலுடன், தரம், மரியாதை, நியாயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 1972-ஆம் ஆண்டு தனது தொழில் பயணத்தைத் தொடங்கினார். தினமும் 500 லிட்டர் பால் விநியோகத்துடன் தொடங்கிய முயற்சி, படிப்படியாக விரிவடைந்து, இன்று நாளொன்றுக்கு 500 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உற்பத்தித் திறன் கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது.

வளர்ச்சிக்கு அடித்தளமான விவசாயிகள்

அரோமாவின் வளர்ச்சியில் விவசாயிகளுடனான நேரடித் தொடர்பு முக்கிய இடம் வகிக்கிறது. 35,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பால் கொள்முதல் செய்யும் நிறுவனம், நியாயமான விலை, கால்நடைத் தீவனம், தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் கால்நடை மருத்துவ உதவி ஆகியவற்றின் மூலம் அவர்களுடனான உறவை வலுப்படுத்தி வருகிறது.

பால் கொள்முதலுடன் முடிந்துவிடாமல், உற்பத்தியாளர்களின் தேவைகளையும் கவனத்தில் கொள்ளும் இந்த அணுகுமுறை, நிறுவனத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே நீண்டகால உறவை உருவாக்கியுள்ளது.

அன்றாடத் தேவைகளிலிருந்து கொண்டாட்டங்கள் வரை

பாலில் தொடங்கிய அரோமாவின் தயாரிப்புப் பயணம், நுகர்வோரின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப விரிவடைந்துள்ளது. பால், தயிர், நெய், வெண்ணெய், பனீர், சீஸ், யோகர்ட் மற்றும் சுவையூட்டப்பட்ட பால் ஆகியவற்றுடன், பேக்கரி உணவுகள், இனிப்புகள், கார வகைகள் என 200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் அதன் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

அன்றாட உணவுத் தேவைகளையும் குடும்பக் கொண்டாட்டங்களையும் சென்றடையும் இந்தப் பன்முகத் தயாரிப்புகள், அரோமாவுக்கு உணவுத் துறையில் தனித்துவமான இடத்தை உருவாக்கியுள்ளன.

விரிவடையும் சந்தை; தொடரும் உறவுகள்

50-க்கும் மேற்பட்ட நேரடி விற்பனை நிலையங்கள், பல மாநிலங்களில் விநியோகம் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் வர்த்தகம் என அரோமாவின் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன. இந்த வளர்ச்சியில் விநியோகஸ்தர்களும் விற்பனைப் பங்காளிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

தொழில் விரிவாக்கத்துடன், ஆற்றல் தேவைகளுக்கான நீண்டகாலத் திட்டங்களிலும் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. அதன் 15 மெகாவாட் சூரிய ஆற்றல் திட்டம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

அடுத்த தலைமுறையின் பார்வையில் புதிய அத்தியாயம்

டாக்டர் ஆர். பொன்னுசாமியின் மகள்களான திருமதி விஜயலட்சுமி மற்றும் திருமதி விமலாதேவி ஆகியோர், அரோமாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை முன்னெடுத்து வருகின்றனர். நிறுவனர் உருவாக்கிய அடிப்படை மதிப்புகளுடன், மாறிவரும் சந்தைத் தேவைகளையும் அடுத்த தலைமுறை நுகர்வோரின் எதிர்பார்ப்புகளையும் இணைத்து நிறுவனத்தின் பயணத்தைத் தொடர்கின்றனர்.

ஐந்து தசாப்தங்களைக் கடந்த அரோமாவின் வரலாறு, ஒரு தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக் கதையாக மட்டுமே சுருங்கிவிடுவதில்லை. விவசாயியின் உழைப்பு, தொழில்முனைவோரின் விடாமுயற்சி, விற்பனைப் பங்காளிகளின் ஒத்துழைப்பு, நுகர்வோரின் நம்பிக்கை ஆகியவை இணைந்து உருவாக்கிய பயணம் அது.

மண்ணோடு தொடங்கிய அந்த உறவு, இன்று மக்களின் அன்றாட வாழ்விலும் தொடர்கிறது.