கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதியான வாளையாரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை (Headlights) எரியவிட்டவாறு கவனத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், கடந்த 4-5 நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. இருப்பினும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. குளிர்காலமும் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் ஸ்வெட்டர் உள்ளிட்ட கதகதப்பான ஆடைகளை அணியத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பனிமூட்டத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழக – கேரள எல்லைப் பகுதியான வாளையாரில் இன்று அதிகாலையில் எதிரே வரும் வாகனங்களோ, முன்னால் செல்லும் வாகனங்களோ சரியாகத் தெரியாத அளவுக்கு அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளைச் ஒளிரச் செய்தபடி மிகவும் மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் பயணித்து வருகின்றனர்.



Leave a Reply