கல்யாண சீசன் நெருங்கி வரும் வேளையில், தங்கம் வாங்குவோருக்கு மீண்டும் ஒரு சம்மட்டி அடி விழுந்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்றும் அதன் விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
-
22 காரட் தங்கம்: கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.13,135-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
வெள்ளி விலை: தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி பிரியர்களுக்கு நிம்மதி தரும் விதமாக இன்று எவ்வித மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,20,000-க்கும் தொடர்கிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஏற்றம் காரணமாக இந்தியச் சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.520 வரை தங்கம் விலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சர்வதேச சந்தையில் நிலவும் சில மாற்றங்களால் வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்பிருக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.



Leave a Reply