தாறுமாறாகக் குறையும் தங்கம், வெள்ளி விலை…!

Spread the love

தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவெனச் சரிந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 வரை குறைந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.13,590-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஒரு கிராம் ரூ.245 என்ற நிலையிலேயே நீடிக்கிறது.

தொடர்ந்து விலை குறைந்து வருவது சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.