அதிரடியாகக் குறைந்தது ஆபரணத் தங்கத்தின் விலை! 🪙

Spread the love
கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், புதிய வாரத்தின் தொடக்கமான இன்று சற்று ஆறுதல் தரும் வகையில் விலை குறைந்துள்ளது.
சென்ற வார இறுதியில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, ஒரு சவரனுக்கு சுமார் ரூ.1,360 வரை அதிகரித்திருந்தது. இதனால் இந்த வாரமும் விலை உயர்வு நீடிக்குமோ என்ற அச்சம் நிலவியது. இதற்கிடையில் ரெப்போ வட்டி உயர்வால் வங்கிக் கடன்களுக்கான இஎம்ஐ சுமை அதிகரித்துள்ளதும் மக்களுக்குக் கூடுதல் கவலையைக் கொடுத்துள்ளது.
இந்தச் சூழலில், இன்றைய வர்த்தக நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ.13,840-க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ.1,10,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளின் காரணமாக விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், வெள்ளிப் பிரியர்களுக்கு இந்த வாரமும் அதே நிலைதான் தொடர்கிறது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நிலையாகவே விற்பனை நடந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது. தொடர்ச்சியாக உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று சற்றே சரிந்திருப்பது நகைப் பிரியர்களுக்குச் சிறிய நிம்மதியைத் தந்துள்ளது.