தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த முத்துபாலாஜி (19), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பரும், குன்னூரைச் சேர்ந்தவருமான சூர்யா (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் குறிச்சி குளக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே சென்றபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முத்துபாலாஜி உயிரிழந்தார். படுகாயமடைந்த சூர்யாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Leave a Reply